யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் திருச்செல்வம் அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பண்ணாகத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற யோகலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,திருமகன்(ராஜூ- கனடா), அருள்முகன்(ரவி- இங்கிலாந்து), பூரணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயமாலினி(கனடா), ஷர்மிளா(இங்கிலாந்து) ஆகியோரின் மாமனாரும்,திருமுகன்(திரு), பூரணி(கனடா), சரண்யா, தியானலட்சுமி(தியானா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் நாகபூசணி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அன்னபூரணம் ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, தம்பிராசா, இராசதுரை, சிவஞானம், தவமணி மற்றும் பாலச்சந்திரா, காலஞ்சென்ற திருநாமம் மற்றும் கனகநாயகம் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற தங்கரத்தினம் மற்றும் பத்மாதேவி, அற்புதமேரி, செல்வம், காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சர்வேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: கெங்கா
0 Comments - Write a Comment