யாழ். சப்பச்சிமாவடி சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தற்பரசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தற்பரசுந்தரம் தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சீதாலெட்சுமி(ஆசிரியை- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,விதுஷன், கிஷோபன், திஷபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, நிர்மலா, மனோகரன் மற்றும் ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிற்சபேசன்(மலேசியா), சிவயோகன்(சுவிஸ்), விக்கினேஸ்வரர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனந்தினி, மணிவண்ணன் ஆகியோரின் தாய் மாமானும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment