யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, இந்தியா சென்னை, ஐக்கிய அமெரிக்கா Staten Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி முத்துச்சாமி அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா கணபதிப்பிள்ளை மனோன்மணி சின்னையா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற கதிரித்தம்பி செல்லமுத்து, செல்லாச்சி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லமுத்து முத்துச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தகௌரி, பாலகுமார், திவியகுமார் மற்றும் செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கருணைலிங்கம், நடராஜா மற்றும் துதிக்கைவேல் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பண்டிதர் ஷண்முகராஜா, சரஸ்வதி, பரமேஸ்வரி, இரத்தினலீலா ஆகியோரின் அருமை மைத்துனியும்,தேவகுமார், பிரேமா, தேவநாயகி, ஹயாத் ஆகியோரின் அருமை மாமியாரும்,அஷ்வத்தாமா , அச்சுதன் , நிகாஷன், ஹர்சிக்கா, ஹரிஷான் , கிறிஸ்டோபர் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment