யாழ். கரவெட்டி வடக்கு கல்வத்தை இரும்பு மதவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தங்கராஜா அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கராஜா(இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்- RMV Income Tax Department, முன்னாள் SKP & Sons உரிமையாளர், அம்பந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமகாராம) அவர்களின் அன்பு மனைவியும், தேவரமணி, தேவமாலினி(கனடா), பிரபாலினி(பிரித்தானியா), நடனசபேசன் மற்றும் விஜிதா(சோபா- ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தொழிலதிபர் A .V .நடராஜா(அம்பந்தோட்டை), நாகரத்தினம், சிவபாக்கியம் மற்றும் கிருஷ்ணராஜா(கரவெட்டி) ஆகியோரின் அருமைச் சகோதரியும், யோகேஸ்வரன்(கனடா), மணீஸ்வரன், சந்தானதேவி, சிவானந்தன்(பிரித்தானியா), வாசுகி மற்றும் சுரதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குமரேஸ்வரன், சந்தானலக்சுமி, ஜெகதீஸ்வரன், சந்திராலக்சுமி, குலவரதராஜா, சக்திராணி மற்றும் காலஞ்சென்ற ராஜேஸ்வரி(மருகா), ராசாமணி(தேவி) அவர்களின் பாசமிகு ஆசை அம்மாவும், அர்ச்சனா, கோகுலவர்த்தன்(ஐக்கிய அமெரிக்கா), மதூரிக்கா(பிரித்தானியா), கௌஷி, சுருதி, யது, யுவன், சிறிநிதி(ஜேர்மனி), பயாஸ், காருணியா(ஐக்கிய அமெரிக்கா), அமல்ராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஷாரிக், ஷாகித், சதா, கேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 01-07-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment