யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பூரணச்சந்திரன் அவர்கள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராஜா, ஆச்சியம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், காலஞ்சென்ற மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரமோகன், கல்யாணி, கமலினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
சிவகலா, செந்திவேல், சோதிமகேஸ்வரன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதித்தாய், முருகையா, சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், பத்மாவதி, கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தகோபன் அவர்களின் அன்புச் சகலனும், பிரணவன், மாதவன், பிரியங்கா, மதுரிகா, விசாகன், கிரிஷாந், சுவேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment