யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பூபாலராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர், செல்வரத்தினம் அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பாலசிங்கம், குணபூசணம் பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலரஜனி அவர்களின் அன்புக் கணவரும், உமேஸ் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் சிவசுப்பிரமணியம், தவமணி, கிருஷ்ணர், மனோன்மணிதேவி, சரஸ்வதிதேவி, விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, பிலோமினா, கந்தசாமி மற்றும் வரதலட்சுமி, காலஞ்சென்ற நாகரட்ணம், நவநாதன், சத்தியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலகிரிதரன்- சித்ரா, பாலரஞ்சன் மற்றும் சத்தியா, பாலகுணாளன்- சித்திரா, பாலஜெயந்தி- காலஞ்சென்ற குணரட்ணம், பாலராகுலன்- தர்ஷினி, பாலமோகனராஜ்- தமயந்தி, பாலவிஜயை- ஜெயமோகன், பாலவிக்னா- சிவகுமார், பாலசாயீஸ்வரன்- நிலாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment