யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, 4 ரஞ்சன் றோட், ஆப் ஸ்ரேசன் றோட், வெள்ளவத்தை, கொழும்பு, இங்கிலாந்து Buckinghamshire ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி வீரசிங்கம் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் குமாரசாமி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சுலோச்சனா(பிரித்தானியா), தக்ஷினி(ஐக்கிய அமெரிக்கா), சுபாஷினி(கனடா), பிருந்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிளாரன்ஸ் ரவிச்சந்திரன், சுப்ரமணியம் ஈஸ்வர ரமணன், சிவகுரு பாலகுமார், இணோக்க மாரசிங்க ஆகியோரின் அன்பு மாமியும், ஜொனதன், ஷலோமி, நீஷா, கனிஷ்கா, கஜன், ஐஸ்வரியா, அக்செல், டனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அகமட், மெக்னா, பிரியாஞ்சலி ஆகியோரின் பேத்தி மாமியாரும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், கோமளாம்பிகை(கோமளா), மரகதவல்லி(பாப்பா), முத்துலிங்கம், புனிதவதி(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment