யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீஹரி மற்றும் கனடாவில் வசித்துவருபவர்களான சுகிர்தலோசனா(பேபி), மீனலோஜினி(பவா), ஸ்ரீகுமரன்(அப்பன்), ஸ்ரீறஞ்சன்(றஞ்சன்), ஸ்ரீவரதன்(வரதன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற துரைராஜா, மற்றும் தனநாயகம், சுவர்ணராணி, கௌரி, சிவரூபினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லாவண்யா- அரவிந்தன், சுகன்யா– செந்தூரன், தர்சிகா– தயாளன், ஸ்ரீஹரி– ஜேர்மிலா, நிலக்சன், பிரவீனன், பிரணவி, ஸ்ரீபன்ராஜ், தாட்சாயினி, அயிந்தன், நிதூசன், நிவேதன், லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிநாஸ், ஆரியா, ஏடன், அஞ்சலி, மலிகா, சந்தோஸ், லிங்கன், ஜேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment