யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் நீதிமன்ற வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சண்முகநாதன் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோவிந்து, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கெளதமன், கெளசிகன்(கட்டடப் பொறியியலாளர்- லண்டன்), கௌரீசன்(இலத்திரனியல் பொறியியலாளர்- நியூசிலாந்து), கௌதீபன்(கட்டடப் பொறியியலாளர்- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இராஜேஸ்வரி, துஷ்யந்தி(பிரித்தானியா), சரளா(நியூசிலாந்து), டினியா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கமலநாதன்(அவுஸ்திரேலியா), தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கந்தசாமி, ரதி(அவுஸ்திரேலியா), மீனாட்சிதேவி, புனிதராணி, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தவமணி, நடேசு, தங்கவேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,தர்ஷிகா, ஸம்மிகா, துஷித்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,வாசுகி, யசோதா, யசோதரன், ரவீந்திரன், ரவிசந்திரன், முரளிதரன், சுகந்தி, மைதிலி ஆகியோரின் சிறிய தந்தையும், கோமகள், அர்னிகா இயல்(நியூசிலாந்து), அட்விகா இன்னிலா(நியூசிலாந்து), சிவன்யா(பிரித்தானியா), சிம்மயா(பிரித்தானியா), கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment