யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பு, கனடா Tornoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் வீரசிங்கம் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நடேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,குணசேகரம்(குணம், GKN அச்சகம்), திவ்வியமலர்(திவ்வியா ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயக்குமார், விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,யோகமணி, காலஞ்சென்ற கனகம்மா, திலகவதி(வேவி), அருமைநாயகம்(அதிபர்), காலஞ்சென்ற கனகநாயகம், அன்னைபூபதி(பொன்னார்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜெனகன், தனுஜன், கஸ்தூரி, ஷாமினா(கனடா), கரிஷன்(கனடா), சஜிந்தன், தயாளினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,பிரகதீஸ், டிவ்வியவர்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06.12.2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment