யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தம்பு அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகுக்கோன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம் அவர்களின் பாசமிகு கணவரும், மோகன், ஜெகன், சுகன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கதிர்வேலு, தங்கம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கோகிலம், தர்மலிங்கம் மற்றும் குணவதி, கோபால், ருக்குமணி, தேவராசா, கமலா, விஜயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெனித்தா, வசந்தி, துஷ்யந்தி, றெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், வினோத், றஜிதா, சாருசன், ஹரிஷன், அகிஷன், அபிஷன், அஜிஷன், மிதுஷன், ஜெருஷன், மெருஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment