திரு வேலாயுதர் விசுவநாதர்

திரு வேலாயுதர் விசுவநாதர்
பிறப்பு : 26/01/1937
இறப்பு : 26/06/2020

யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதர் விசுவநாதர் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் கதிர்காமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,  மதிவதனி, திலகேஸ்வரன், இளம்பிறைநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான அங்கயம், அம்பலவாணர் மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்றவர்களான நடராசா, உமையாத்தைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், உமாமகேஸ்வரி, மனோன்மனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 சிறீவிசுவநாதன், சிறீறங்கநாதன், சிறீறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், கோடீஸ்வரன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு  சிறிய தந்தையும்,  சர்மிளன், சரண்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2020 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் வரணி இடைக்குறிச்சி கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வேலாயுதர் விசுவநாதர்

திரு வேலாயுதர் விசுவநாதர்

Contact Information

Name Location Phone
சிறி - மருமகன் United Kingdom +447466883675
இளம்பிறை - மகன் sri lanka +94770174518

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment