யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கண்ணம்மா அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சிவகாமிப்பிள்ளை(அம்மணி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதப்பு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் ஆசை மனைவியும், புண்ணியமூர்த்தி, தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற குணபாலசந்திரன், மகாலெட்சுமி(ஆசிரியை), சிவலோகநாதன்(பரிஸ் ஆச்சி சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,சிலோசனா, மனோன்மணி, கமலாதேவி, சந்திரகலா, மோகனசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, அருளம்மா, வைத்திலிங்கம், கோபாலபிள்ளை, நடராசா, திருநாவுக்கரசு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சரவணமுத்து, செல்லம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும், சத்தியா, ரசி, சுபா, வதன், பிரதி, காலஞ்சென்ற கோபிநாத், கோபிகா, கோபிதாஸ், கோபிதா, கோபினா, துஸ்யந்தன், மீரா, சணேஷ்ன், சராங்கன், பிரவீன், சஷ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிந்துயா, அக்சனா, லக்சயா, சானுயா, சாய்ஜித், சாரா, கிறேசினி, அபி, அடோனிகா, மோனிஸ், ஆர்த்திக், சஷ்மிதா, சயானா, காசினி, ரிஷ்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment