யாழ். தாவடி தெற்கு பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமசிவம் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்லையா தங்கராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அஜந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,மாதங்கி(ஆயினி) அவர்களின் அன்புத் தந்தையும்,ராசாத்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,லிசா, துர்கா, கெளசிக் ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment