யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் கந்தையா அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெளரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,சாரங்கன்(கஜன்), சாருகன்(சாரு), அபிநதா(அபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாணகா(Heidi), சிவப்பிரியா(பிரியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சரஸ்வதி, பராசக்தி மற்றும் இரத்தினேஸ்வரி, புவனேஸ்வரி, சச்சிதானந்தன், தவேந்திரராசா(தவேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மகாதேவன், பாக்கியநாதன் மற்றும் மாணிக்கராசா, பராசக்தி, மகிழ்மலர், மணிமலர், கமலவண்ணன், மணிவண்ணன், ஜெயகெளரி, மதிவண்ணன், உதயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மாஜா, மெலினா, விக்ரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment