யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கனகசபை(முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) அவர்களின் மகன்வழிப் பேரனும், காலஞ்சென்ற சண்முகம் அம்பலவாணர்(சட்டம்பி அம்பலம், முன்னாள் ஆசிரியர், காரை- இந்துக் கல்லூரி) அவர்களின் மகள்வழிப் பேரனும்,காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி கனகசபை திருநாவுக்கரசு(முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு ஆறுமுகம்(கண்டி ஆறுமுகம்) பத்மாசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாசினி(British Railways, U.K.) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,Dr.மனோரஞ்சன்(பிரித்தானியா), Dr.பாமினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Andy Monkton(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,மனோன்மணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா), Dr. தவமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தம்பிராஜா(முன்னாள் உப அதிபர், காரை- இந்துக் கல்லூரி), கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற பொறியியலாளர்-அவுஸ்திரேலியா), சரோஜினி(பிரித்தானியா), மகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான இந்திராணி, யோகேந்திரன், லோகநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Noah மதன், Max ரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் களபூமி காரைநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment