யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வரதலிங்கம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தயாளினி(சித்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,தீபிகா, பானுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகரத்தினம்(ஓ.பெ.அதிபர்- புங்குடுதீவு/ம/வி), தனபாலசிங்கம்(நெல்லியடி குணம் அன்.கோ), கமலேஸ்வரி(சுதுமலை), காலஞ்சென்ற சறோஜினி, புஸ்பலதா(யாழ்ப்பாணம்), கனகாம்பிகை(பிரான்ஸ்), துரைரட்ணம்(அதிபர்- சுதுமலை வ/த/ம/வி), சுவேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரிபூரணானந்தன்(பண்ணாகம்), காலஞ்சென்ற பரிமளகாந்தன்(நோர்வே), சிவானந்தன்(நீர்கொழும்பு), செல்வானந்தன்(லண்டன்), ஜெயரூபி(டென்மார்க்), சுந்தரலட்சுமி(சுவிஸ்), தவநாயகி, இராசேஸ்வரி, இராசேந்திரம், பாலேந்திரன், இரவீந்திரன், நிஷாந்தி, அனுசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment