யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி லெற்ரீசியா அவர்கள் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் இளைப்பாற்றியை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம், பூமணி, பாக்கியம், கந்தவனம் மற்றும் கண்ணகை, சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-07-2020 வியாழக்கிழமை அன்று திருப்பலி திருச்சபை தேவாயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: கண்ணகை அம்மா(சகோதரி)
0 Comments - Write a Comment