யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை அராலி மேற்கை வதிவிடமாகவும், மாவடிச் சந்தி மூளாய் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானம்மா அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவரகளான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், கிருபாமலர், சிவசோதி, அகிலாண்டேஸ்வரி, சர்வேஸ்வரி, வாமதேவன், தவனேஸ்வரி, செல்வக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, ஆறுமுகம், ராஜபூபதி, ரஞ்சிதமலர் மற்றும் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், பரமேஸ்வரன் மற்றும் நாகேஸ்வரன், கணபதிப்பிள்ளை, நித்தியகலாரஜனி, சற்குணராசா, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவீந்திரன்- விஜயலக்சுமி, கயேந்திரன்- சூரியகாந்திமலர், விஜிதா- சிவகுமார், காலஞ்சென்ற விஜிதரன், பிரமிளா- ரட்ணசீலன், பிரதீபா- மனோரஞ்சித், தர்மிளா- வசீகரன், அரிகரன்- தர்சினி, செந்தூரன்- சுமனா, ஸ்ரீகோபிநாத்- தாரணி, அபிராமி, கௌசல்யா- வியாசன், பிரகலா- பஞ்சகரன், அரவிந்தன், தட்சாயிணி, சுடர்விழி- கிரிசாந், ஆரூரன், துவாரகா, சாருண்யா, அபிராஜி- பிரதாப், சுடர்வண்ணன், டினேஸ், ஐங்கரன், நிறோசன், அகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், கிசோர், திருநேத்திரா, கிருத்திக், அஸ்வினி, தீபக், நிலா, கவின், றோசன், ஆதிசா, ஜெய்தேவ், ஜென்சிகா, ரித்வின், சஸ்வின், நாவியா, சுஸ்மிதா, சபரிஸ், ரிசிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment