யாழ். கரம்பன் மெலிஞ்சமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இசிதோர் திருச்செல்வம் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், இசிதோர் பிரகாசி தம்பதிகளின் அன்பு மகனும், பிரகாசம் கித்தோரி தம்பதிகளின் அன்பு மருமகனும், றாணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யசி மற்றும் விஜி, அனிஸ்ரன், சுசி, டயானா, றோகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோண்சன், சொபிதா, காலஞ்சென்ற டெனிஸ் மற்றும் சிவநாதன், வருண் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மத்தியாஸ், ஆசை, குமாரத்தி மற்றும் பவளம், கீர்தம், றதி, செல்லமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மேரி, கித்தோரி, டேவிட், ராசன், மலர் மற்றும் கிறேசுமணி, சந்தானமுத்து, லில்லி, துரைசிங்கம், ஒஸ்தினம்மா, சின்ராசா, சகாயன், ஜெசின்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, மகராசம்பிள்ளை மற்றும் நேசமலர், அற்புதராணி, ஜெயா, ஜேசுதாசன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அனித், விஜித், விசாலன், அபி, ஜீலியன், வியோலா, விவியானா, கித்தோரி, வினித், கியூறி, டெனிலா, டிலான், கமிசன், சியானா, கவுசிக், ஜூலியன், வருனியா, வருண்சன், வர்சினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்தரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணிக்கு மெலிஞ்சமுனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment